எ.டி.எம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

கணக்குதரர்கள் வாரம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் இருந்து எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு ரூ.4500 எடுக்கலாம் என்கிற எ.டி. எம் உச்சவரம்பு தற்போது ரூ.10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு…

source : AdiraiExpress

Tamil Gun : பத்து விரலை காட்டி ஒல்லி நடிகரை அதிர வைத்த அழகி நடிகை ,Tamil cinema news

Tamil Gun, tamilgun ,Tamil cinema news :

சென்னை: பெரிய வீட்டு மருமகள் கேட்ட சம்பளத்தை கேட்டு ஒல்லி நடிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

ஒல்லி தனது மச்சினி இயக்கத்தில் வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகை ஒல்லியின் வில்லியாக நடித்து வருகிறார். அம்மணிக்கு ரூ. 4 கோடி சம்பளமாம்.

இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் பெரிய வீட்டு மருமகளான உலக அழகி நடிகையிடம் பேசிப் பார்த்தார்களாம். அம்மணி ரூ.10 கோடி சம்பளம் கேட்டதால் ஒல்லி அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

அதன் பிறகு கால் அழகி நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். உலக அழகி நடிகை ஒல்லியின் மாமனாருக்கு ஜோடியாக நடித்தவர். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தி படம் ஹிட்டாகியுள்ளது.

அதை எல்லாம் மனதில் வைத்து தான் ரூ.10 கோடி கேட்டிருப்பார் போன்று.

English summary
Senior actress reportedly stunned olli actor by asking Rs. 10 crore to act in his upcoming movie.

Let’s block ads! (Why?)

மத்திய அரசுக்கு தமிழக அரசு மனு..!

தமிழகத்தின் வறட்சி மற்றும் புயல் பாதிப்பினை
சீர் செய்ய நிவாரண நிதியாக ரூ.39.565 கோடி தேவைப்படுகிறது.

வறட்சி நிவாரணமாக ரூ.1,000 கோடி உடனடியாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு..

source : AdiraiExpress

இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் செய்ய 1,70,025 பேருக்கு அனுமதி!

கடந்த வாரம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். மீண்டும் பழையபடி அனைத்து சர்வதேச நாடுகளுக்குமான ஹஜ் அனுமதி அதிகரிக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்திய ஹஜ் தூதுக்குழுவிற்கும் சவுதி அமைச்சகத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுவரை அனுமதிக்கப்பட்ட 1,36,020 பேர்களுக்கு பதிலாக மீண்டும் 1,70,025 ஹஜ் யாத்ரீகர்கள் எதிர்வரும் 2017 ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவதற்கான புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்த நிகழ்வில் மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சவுதிக்கான இந்திய தூதர் ஜாவித் அஹ்மது, துணைத் தூதர் நூர் ரஹ்மான் ஷேக் உட்பட பலர் உடனிருந்தனர்.

source : AdiraiExpress

மரண அறிவிப்பு ( முகம்மது பீவி அவர்கள்)

அதிரை நியூஸ்: ஜன-15
அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.கே அபுல்ஹசன் அவர்களின் மகளும், எம் ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மனைவியும்,
கா.முகமது பாருக், பேராசியர் நசீர் அகமது ( ஓய்வு ) ஆகியோரின் கொழுந்தியாவும், மலேசியா ஜாகிர் உசேன், திருத்துறைப்பூண்டி ஜமால் முகம்மது, முத்துப்பேட்டை நவாஸ்கான், ஆர். ராவூத்தர் ஆகியோரின் மாமியாருமாகிய முகம்மது பீவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

“இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்”

அன்னாரின் ஜனாஸா நாளை ( 17-01-2017 ) லுஹ்ர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

Tamil Gun : கேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர் ,Tamil cinema news

Tamil Gun, tamilgun ,Tamil cinema news :

சென்னை: வெற்றி நடிகரும், அவரது காதலியான கடைத்தெரு நடிகையும் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.

வெற்றி நடிகரும், கடைத்தெரு நடிகையும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. நடிகையை திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளார் நடிகர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து புதுமுக இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் பிரேக் விட்டால் போதுமாம் காதல் ஜோடி நேராக கேரவனுக்குள் சென்றுவிடுகிறதாம். கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.

அவர்கள் இருவரையும் கேரவனுக்குள் இருந்து வெளியே வரவழைப்பதற்குள் இயக்குனருக்கு கண்ணைக் கட்டிவிடுகிறதாம். படத்தை எடுத்துவிடலாம் ஆனால் இந்த ஜோடியை கேரவனில் இருந்து வெளியே கூட்டி வர முடியலையே என்று படக்குழு புலம்புகிறதாம்.

காதல் ஜோடியால் படப்பிடிப்பு தளத்தில் ஆளாளுக்கு டென்ஷனாக உள்ளார்களாம்.

English summary
A debutant director is reportedly angry with the leading pair of his movie as they prefer to stay in vanity van most of the time.

Let’s block ads! (Why?)

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வாசல் ஊராட்சியில் சுற்றுலாத் துறையின் சார்பாக பொங்கல் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இன்று (16.01.2017) மாலை அணிவித்து வரவேற்றார்கள்.

வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பொங்கல் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கினார்கள்.

பின்னர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டி, உறியடி போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.  மேலும், நெய்வாசல் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் நடன நிகழ்ச்சிகள்,  இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியும், தமிழ்நாட்டு கலைஞர்களின் கோலாட்டமும்,  தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் சார்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றதை வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஹலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜன்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 60   வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மற்றும் அலுவலர்களுடன் நெய்வாசல் ஊராட்சியில் சுற்றுலா பயணிகளை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன்,  தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் மந்திராசலம்,  மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சூரியநாராயணன், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன்,  தென்னக பண்பாட்டு நண்பர் குழு உறுப்பினர் முத்துக்குமார், ஏராளமான பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

 

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

சினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: ஜன-16
வெட்கமற்ற (Shameless), ஒழுக்கக்கேடான (Immoral), நாத்திக (Atheistic), அழுகிய (Rotten) சிந்தனைகளை மனித மனதுள் விதைப்பதுடன் அநாச்சாரமான முறையில் ஆண் பெண் கலப்பை ஊக்குவிக்கும் பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரி நிகழ்ச்சிகளை திறந்துவிட்டால் சவுதியின் இஸ்லாமிய கலாச்சாரத்தை சிதைத்துவிடும் என சவுதியின் தலைமை இமாம் ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் (Grand Mufti Sheikh Abdulaziz Al Sheikh) அவர்கள் தனது இணையதளம் மூலம் சவுதி அரசின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம், சவுதி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையின் பொறுப்பாளர் அம்ரு அல் மதானி என்பவர், சவுதி அரசின் தூர நோக்கு மாற்றுப் பொருளாதார திட்டமான ‘விஷன் 2030’ எனும் திட்டத்தின் கீழ் சில பண்பாட்டு கலாச்சாரங்களை கைவிடவும், பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரிகளுக்கு அனுமதி தரவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியதை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா, மேடை கச்சேரிகள் போன்றவைகளுக்கான தடைகள் ஏற்கனவே சவுதியில் அமலில் இருக்கும் நிலையில், இதுபோன்ற அதிகார மையங்களில் அமர்ந்திருப்போர் தீமையை அழித்து நன்மையை கொண்டு வர நாட வேண்டுமேயொழிய ஷைத்தானிய நடவடிக்கைகளுக்கு கதவை திறந்துவிட முயலக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் – எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)

Sources: Asian News Int’l / Syndigate.info / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

துபாயில் புதிய ஸ்மார்ட் வாடகை கார் திட்டம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: ஜன-16
துபையில் இன்று முதல் புதிய ஸ்மார்ட் வாடகை கார் திட்டம் அமுலுக்கு வந்தது, அதன்படி நாள் வாடகை கார்களுக்கு பதிலாக 6 மணிநேரத்திற்குள் பயன்படுத்தும் வகையிலான மணிக்கணக்கு வாடகை கார் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பமாக, துபை போக்குவரத்து துறையுடன் இணைந்து U drive & ekar ஆகிய 2 தனியார் நிறுவனங்கள் 200 கார்களுடன் துபையின் முக்கிய இடங்களிலிருந்து சேவையை வழங்குகின்றன. சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்றவாறு நிமிடத்திற்கு 40 முதல் 50 பில்ஸ் (காசுகள்) அதாவது மணிக்கு சுமார் 24 முதல் 30 திர்ஹம் வரை வசூவிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு இந்த கார்கள் அனைத்தும் மின்சக்தி அல்லது கலப்பு சக்தியால் இயங்கக்கூடியவை.

மொபைல் போன் அல்லது டேப்லட்கள் மூலம் ஸ்மார்ட் ஆப் வழியாக முன்பதிவு செய்யப்படும் இந்த வாடகை கார்கள் 45 இடங்களிலிருந்து சேவையை வழங்கும் அதில் ராஷிதியா, பர்ஜூமான், இப்னு பதூதா, யூனியன் மற்றும் பிஸ்னெஸ் பே ஆகிய 5 மெட்ரோ நிலையங்களும் அடக்கம்.

துபை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பார்க்கிங் வசதியுள்ள (RTA Parking Lots) இடங்களிலிருந்தே பயணிகளை ஏற்றி, இறக்கும். பயணிகளுக்கான சேவைக்கு பிந்திய கட்டண பற்றிய விபரம் அனைத்தும் (மொபைல், டேப்லட் போன்ற) ஈ-சேவை (e-service) வழியாக தெரிவிக்கப்படும்

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

துபாய் விமான நிலைய எக்ஸ்குளுசிவ் ஸ்பெஷல் லவுஞ்ச்களை பிற வகுப்பு பயணிகள் பயன்படுத்த அனுமதி !

அதிரை நியூஸ்: ஜன-16
பட்ஜெட் சேவை மற்றும் எகனாமி டிக்கெட்டுகளில் பயணிக்கும் விமான பயணிகள் இனி ‘துட்டு’ கொடுத்தால் எக்ஸிகியூடிவ் மற்றும் பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் உபயோகிக்கும் பல்வேறு நவீன வசதிகள் உள்ள ‘எக்ஸ்குளுசிவ் ஸ்பெஷல் எமிரேட்ஸ் லவுஞ்ச்’களை பயன்படுத்திக் கொள்ளலாம் என துபை விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.

பிஸ்னஸ் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் லவுஞ்சை பயன்படுத்த 100 டாலரும், முதல் வகுப்பு லவுஞ்சை பயன்படுத்த 200 டாலர் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

கடந்த 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி மற்றும் பிற விமான நிறுவனங்களின் போட்டியால் நிகர லாபத்தில் சந்தித்த 64 சதவிகித சரிவை தொடர்ந்து அதை ஈடுகட்டும் முயற்சிகளில் ஒன்றாக 2016 அக்டோபர் முதல் பயணிகள் திர்ஹம் 50 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்து கொள்ளும் முறையை அறிமுகம் செய்தது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

ஆபத்தான ஐடியா? சட்டவிரோத குடோன்களாக மாறிய சாக்கடைக் குழிகள்!

அதிரை நியூஸ்: ஜன-16
துபையில் தொழிலாளர்களின் முகாம்கள் நிறைந்த பகுதியான முஹைஸ்னாவில் கைவிடப்பட்ட 10 சாக்கடைக்குழிகளை (Manhole) விற்பனைக்காக சாமான்களை பதுக்கும் இடங்களாக மாற்றி வைத்திருந்தனர் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர்.

மாநகராட்சியின் உதவியுடன் துபை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குடோன் சாக்கடை குழிகளிலிருந்து விற்பனைக்குத் தயாராக கம்பளி போர்வைகள், சமையலறை சாதனங்கள், கார்பெட்டுகள், தொழிற்கருவிகள் போன்றவை சுமார் 30 டன் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழித்தொழிக்கப்பட்டன.

இதேபோல் பிற எமிரேட்டுகளில் விற்பனைக்கு உகந்தவையல்ல எனக் கழிக்கப்படும் காய்கறிகள், மாமிசங்கள், மீன்கள் போன்றவற்றை ஏற்றிவந்த சுமார் 45 பிக்அப் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 3 மாதங்களுக்கு முடக்கப்பட்டதுடன் அதன் ஓட்டுனர்களுக்கும் கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டு, இனி இதுபோன்ற செயல்களை தொடர மாட்டேன் என்றும் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டுள்ளது மேலும் அத்தகைய வாகனங்கள் ஒரேயடியாக கைப்பற்றப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf news

தமிழில்: நம்ம ஊரான்

Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

ஷார்ஜாவில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை திறப்பு !

அதிரை நியூஸ்: ஜன-16
ஷார்ஜாவில் 400 மில்லியன் திர்ஹம் செலவில், 17,000 சதுர அடி பரப்பளவில், தரை தளத்துடன் கூடிய இரண்டடுக்கு மாடிகளுடன் புதிய நவீன மத்திய சிறை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்த்துவிட்டு சிறையை பற்றிய கூடுதல் தகவல்கள் பார்ப்போம்.

1. இந்த சிறையில் 8 அறைகள் டிவி வசதி, கண்காணிப்பு கேமராக்கள், சூரியக் குளியலுக்கான திறந்தவெளி அறை, டாக்டர் மற்றும் நார்சுகளுக்கான அறை, மருந்தகம், அறுவை சிகிச்சைக்கான அறை (Operation Theater) மற்றும் 15 எய்ட்ஸ் மற்றும் காசநோய் நோயாளிகளுக்கான சிகிச்சை அறை போன்றவைகளை உள்ளடக்கியது.

2. கைதிகளின் திறமைக்கேற்ப பயிற்சிக்கூடத்தில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கத்தேவையான நவீன கருவிகள் (Simulators) உள்ளன.

3. சுமார் 3 மில்லியன் செலவில் கைதிகள் ‘ஆன்லைன்’ வழியாக தங்களின் படிப்பைத் தொடர நவீன கருவிகளுடன் வகுப்பரை.

4. உணவகம், தொழகை கூடம், நூலகம் மற்றும் தொழிற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள்.

5. விடுதலையாகும் கைதிகள் சமூகத்தில் மீண்டும் கவுரவத்துடன் வாழும் வகையில் தார்மீக, நிதி உதவிகள், (Moral & Financial Supports) கல்வி (Education), மார்க்க அறிவுரைகள் (மற்றும் மனநல ஆலோசணைகள்.

மேற்காணும் வசதிகளுடன் கைதிகள் தங்களின் குடும்பத்தை சந்தித்து வர குறுகிய விடுப்புக்கள் (Conjugal Visits), நன்னடத்தையுள்ள கைதிகள் முன்கூட்டியே விடுதலை, வேலைலைவாய்ப்புக்கள் என புனர்வாழ்வு வசதிகளும் செய்து தரப்படவுள்ளன.

ஷார்ஜாவின் அல் ரம்தா பகுதியில் பழைய சிறைச்சாலை இருந்த அதே இடத்தில் புதிதாக இந்த சிறை கட்டப்பட்டுள்ளது. பழைய சிறையில் ஒரே நேரத்தில் 2,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் ஆனால் புதிய சிறையில் 3,000 பேர் வரை அடைக்க முடியும். ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு தனித்தனி சிறைக்கட்டிட தொகுதிகளுடன் கைதிகள் தற்கொலை மற்றும் காயப்படுத்திக் கொள்வதிலிருந்தும் காக்கும் வகையிலான சிறையமைப்பு. மேலும் சிறை வளாகம் முழுவதுமே கட்டுப்பாட்டு அறையிலிருந்து மட்டுமே திறக்க முடியும் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கேமரா கண்காணிப்பு என கட்டமைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

 


Let’s block ads! (Why?)

Source : AdiraiNews

TamilGun : எனக்கு மட்டும் ஆயுள் தண்டனை: காளைகள் பற்றி 12 வருஷத்திற்கு முன்பே கவிபாடிய கமல் ,tamil cinema news

TamilGun : tamil cinema news :

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் குறித்து உலக நாயகன் எழுதிய கவிதை சமூக வலைதளங்களில் மீண்டும் உலா வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேரணியும் நடந்துள்ளது, நடந்து வருகிறது.

What did Kamal Hassan write about bulls?

ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள் ஏறு தழுவுதல் என்று கூறுங்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் இந்தியா டுடே மாநாட்டில் தெரிவித்தார். காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை மாறாக அதன் மீது பாசம் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக ட்விட்டரிலும் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் பற்றி கமல் எழுதிய கவிதை தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அந்த கவிதை இதோ,

English summary
A poem on bulls written by Kamal Haasan 12 years ago is doing rounds on social media at a time when Jallikattu is gaining importance in Tamil Nadu.

Let’s block ads! (Why?)

வனத்திருப்பதி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

தென்திருப்பேரை,

குரும்பூர் அருகே உள்ள வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை முன்னிட்டு மூலவர் திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று மாலை 6 மணிக்கு சீனிவாச பெருமாள் குதிரை வாகனத்தில் பரிவேட்டை எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபால், மகன்கள் சிவக்குமார், சரவணன் மற்றும் கோவில் மேலாளர் வசந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Let’s block ads! (Why?)

from PearlCityExpress » தூத்துக்குடி செய்திகள் http://ift.tt/2jVap2s
via IFTTT

கட்டபொம்மன் கோட்டையில் காணும் பொங்கல் கொண்டாடிய சுற்றுலா பயணிகள்

ஓட்டப்பிடாரம்,

காணும் பொங்கல்

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்தனர்.

காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன்படி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டனர். முன்னதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் முருகானந்தம், யூனியன் ஆணையாளர் கிரி ஆகியோர் கோட்டையில் உள்ள கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கோட்டையில் உள்ள அவருடைய குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் கோமாதா பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பொங்கல் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

விழாவில் வீரசக்க தேவி ஆலய தலைவர் முருகபூபதி, செயலாளர் மல்லுசாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு ஜெகவீரபாண்டிய சுப்பிரமணியகட்டபொம்முதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடியில் இருந்து, புதியம்புத்தூர் மற்றும் குறுக்குச்சாலை வழியாக பாஞ்சாலங்குறிச்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Let’s block ads! (Why?)

from PearlCityExpress » தூத்துக்குடி செய்திகள் http://ift.tt/2jUTddo
via IFTTT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

திருச்செந்தூர்,

பரிவேட்டை நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.

மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பின்னர் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி அலைவாயு கந்தபெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கடற்கரையில் கூட்டம்

பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு சென்றார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி ரதவீதி, சன்னதித்தெரு வழியாக கோவிலை சேர்ந்தார்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் திரளான மக்கள் குவிந்தனர்.

Let’s block ads! (Why?)

from PearlCityExpress » தூத்துக்குடி செய்திகள் http://ift.tt/2jVbKq4
via IFTTT

இன்று மாலை நடைப்பெறும் இளம் இஸ்லாமியன் பரிசு அளிப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு!

இளம் இஸ்லாமியன் மார்க்க அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு செக்கடி பள்ளிவாசல் அருகே நடைபெறும் பரிசு அளிப்பு விழாவில் சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அதுசமயம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிரையர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ள வேண்டும் என இளம் இஸ்லாமியன் கமிட்டியினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

source : AdiraiExpress

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் சொந்த ஊரான திருப்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு..!

ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான திருப்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் அவரது பிறந்த ஊரான திருப்பதியை அடுத்த நாராவாரிபள்ளியில் கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் பொங்கலை கொண்டாட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அங்கு வந்திருந்த நிலையில் நாராவாரிப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டின் போது கொம்புகளின் மீது பதக்கம் கட்டப்பட்டு திறந்துவிடப்பட்ட மாடுகளை இருபுறமும் நின்ற இளைஞர்கள் அடக்க முயன்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்த இடையூறும் இன்றி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

source : AdiraiExpress

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற இந்தியா இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 48.1-வது ஓவர் முடிவிலேயே 356 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விராட் கோலி 122 ரன்களும், கேதார் ஜாதவ் 120 ரன்களும் எடுத்தனர். ஒருநாள் போட்டியில் வெற்றிகரமாக இலக்கை எட்டிய போட்டியில் 15வது சதம் அடித்து சச்சினின் சாதனையை விராட்கோலி சமன் செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விராட்கோலி கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்று விளையாடிய முதல் போட்டியிலேயே கடினமான இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

source : AdiraiExpress